புத்தரின் உருவப்படம் பொறித்த சேலை அணிந்திருந்த பெண் சட்டத்தரணி – பொலிஸார் கைது செய்ய முயற்சி

புத்தரின் உருவப்படம் பொறித்த சேலை அணிந்திருந்த இளம்பெண் சட்டத்தரணியொருவர் யாழ்ப்பாண பொலிசாரால் கைது செய்ய முயற்சிக்கப்பட்டமைக் காரணமாக நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
யாழ்.மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குகளில் முன்னிலையாகுவதற்காக இளம்பெண் சட்டத்தரணியொருவர் இன்று(புதன்கிழமை) காலை நீதிமன்ற வளாகத்திற்கு வந்திருந்தார்.
அவரது சேலையில் புத்தரின் உருவப்படம் பொறிக்கப்பட்டிருந்தது. அதனை அவதானித்த நீதிமன்ற பொலிசார், யாழ் பொலிஸ் தலைமையகத்திற்கு அறிவித்தனர்.
அதனை அடுத்து யாழ் பொலிஸ் நிலையத்தில் இருந்த வந்த பொலிஸ் அணியொன்று அந்த இளம்பெண் சட்டத்தரணி நீதிமன்றை விட்டு வெளியேறிய போது கைது செய்ய முயற்சித்தது.
இதனால் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அதனை அடுத்து சம்பவ இடத்தில் ஏனைய சட்டத்தரணிகளும் கூடி கைது செய்ய முயற்சித்தமைக்கு கடும் எதிர்ப்பை தெரிவித்தனர்.
இதனை அடுத்து பொலிஸார் குறித்த சட்டத்தரணியை பொலிஸ் நிலையம் வந்து வாக்கு மூலம் தருமாறு கோரி அழைத்து சென்றுள்ளனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.