புத்தாண்டில் இந்தியாவில் 60,000 குழந்தைகள் பிறப்பு

புத்தாண்டு தினத்தில் உலகிலேயே அதிகபட்சமாக 60,000 குழந்தைகள் இந்தியாவில் பிறந்துள்ளதாக யுனிசெஃப் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் யுனிசெப் அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் உலக அளவில் புத்தாண்டு தினத்தில் பிறக்கும் குழந்தைகள் குறித்த புள்ளிவிவரத்தை வெளியிட்டு வருகிறது.
அந்த வகையில் 2021 ஆம் ஆண்டு புத்தாண்டு தினத்தில், ஜனவரி 1ஆம் திகதி பிறந்த குழந்தைகள் பற்றி தகவலை வெளியிட்டுள்ளது.
அதில் ஜனவரி 1ஆம் திகதி உலகம் முழுவதும் 3,71,504 குழந்தைகள் பிறந்துள்ளதாகவும் இதில் இந்தியாவில் அதிகபட்சமாக 60,000 குழந்தைகள் பிறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை குழந்தை பிறப்பு விகிதத்தில் முதலிடத்தைப் பிடிக்கும் சீனாவைப் பின்னுக்குத் தள்ளி இந்தியா தொடர்ந்து இரண்டாவதாக முதலிடம் பெற்றுள்ளது.
எனினும் இந்தியாவில் புத்தாண்டு குழந்தை பிறப்பு விகிதம் கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு குறைந்துள்ளது. கடந்த ஆண்டு புத்தாண்டில் இந்தியாவில் 67,395 குழந்தைகள் பிறந்தன.
இதனிடையே இந்த ஆண்டு புத்தாண்டில் குழந்தை பிறப்பு விகிதத்தில் சீனா இரண்டாவது இடத்தில் உள்ளது. அங்கு இந்த புத்தாண்டில் மட்டும் 35,615 குழந்தைகள் பிறந்துள்ளன.
இதற்கு அடுத்தப்படியாக நைஜீரியா (21,439), பாகிஸ்தான் (14,161), இந்தோனேசியா (12,336), எத்தியோப்பியா (12,006), அமெரிக்கா (10,312), எகிப்து (9,455), பங்களாதேஷ் (9,236) மற்றும் கொங்கோ ஜனநாயக குடியரசு (8,640) குழந்தைகள் பிறந்துள்ளன.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.