புயலின் தாக்கத்தால் 200க்கு மேற்பட்ட இரணைமடு நன்னீர் மீனவர்கள் பாதிப்பு
In இலங்கை December 12, 2020 3:39 am GMT 0 Comments 1282 by : Yuganthini
கிளிநொச்சியில் 200க்கு மேற்பட்ட இரணைமடு நன்னீர் மீனவர்கள், புயலின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அண்மையில் இடம்பெற்ற இயற்கை அனர்த்தம் காரணமாக தமது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக குறித்த மீனவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
கிளிநொச்சி- இரணைமடு குளத்தினை நம்பியே 254 மீனவ குடும்பங்கள் தமது ஜீவனோபாயத்தை கொண்டு செல்கின்றனர். புரவி புயல் காரணமாக 6 நாட்களிற்கு மேல் தொழிலில் ஈடுபட முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் தங்களது குடும்பத்தின் வாழ்வாதாரம் முற்றாக பாதிப்படைந்துள்ளது என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதேவேளை குளத்தில் அதிகளவு அழுக்குகள் கலந்துள்ளமையால், தமது தொழிலை முன்னெடுக்க முடியாத நிலை தற்போது ஏற்பட்டுள்ளது எனவும் மீனவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
ஆகவே, இத்தகைய சூழ்நிலையில் தமது பாதிப்புக்கள் தொடர்பாக சம்மந்தப்பட்ட தரப்பினர் ஆராய்ந்து, நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.