புரவி சூறாவளி இன்று இரவு 7.10 மணியளவில் நாட்டை கடக்கும் – வளிமண்டலவியல் திணைக்களம்
In இலங்கை December 2, 2020 6:27 am GMT 0 Comments 1970 by : Dhackshala

புரவி சூறாவளி திருகோணமலை மற்றும் பருத்தித்துறைக்கிடையிலான முல்லைத்தீவினை அண்மித்த கடற்பரப்பில் இன்று இரவு 7.10 இற்கு நாட்டிற்குள் பிரவேசிக்கும் என எதிர்பார்த்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதன்போது கிழக்கு, வடக்கு, வடமத்திய, வடமேல், மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
சில இடங்களில் 200 மி.மீ க்கும் அதிகமான மிகப் பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
நாட்டின் ஏனைய பிரதேசங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
மேலும் வடக்கு, வடமத்திய, கிழக்கு, வடமேல், மேல், மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 80-90 கிலோ மீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் மிகப் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.