புரவி புயலை தொடர்ந்து மீண்டும் ஒரு புயல் உருவாகிறது – வானிலை ஆய்வு மையம்!
In இந்தியா December 3, 2020 10:59 am GMT 0 Comments 1754 by : Krushnamoorthy Dushanthini

தெற்கு அந்தமான் பகுதிகளில் நாளை (வெள்ளிக்கிழமை) மேலும் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புரவி புயல் பாம்பனை நெருங்கி வரும் நிலையில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியின் நகர்வுகள் புரவி புயல் கரையை கடந்த பின்பு தெரியவரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இலங்கையில் புரவி புயல் தற்போது வங்கக்கடலில் பாம்பனுக்கு 90 கி.மீ. தொலைவில் புரவி புயல் மையம் கொண்டுள்ளதாகவும், மணிக்கு 12 கி.மீ வேகத்தில் புரவி புயல் பாம்பனை நெருங்கிக்கொண்டிருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
திருகோணமலையில் கரையை கடந்த புரவி புயல் பாம்பன்- குமரி இடையே நாளை அதிகாலைக்குள் மீண்டும் கரையை கடக்கும் எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.