புரேவி புயலால் நீரிழ் மூழ்கிய வயல் நிலங்கள்
In இலங்கை December 15, 2020 8:31 am GMT 0 Comments 1500 by : Dhackshala

வடக்கு, கிழக்கு மாகாணங்களை கடந்த வாரம் அச்சுறுத்திய ‘புரேவி’ புயல் காரணமாக மன்னார் மாவட்டத்தில் பெய்த கடும் மழையால் பெரும்போக பயிர் செய்கை மேற்கொள்ளப்பட்ட வயல் நிலங்கள் முற்றாக நீரில் மூழ்கியுள்ளன.
இதனால் விவசாயிகள் பெரும் அழிவை சந்திக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
குறிப்பாக பிரதான வாய்க்கால்களில் தொடர்ச்சியாக நீர் வழிந்து செல்வதாலும் இடையிடையே மழை பெய்து கொண்டிருப்பதாலும் வயல்களில் தேங்கியிருக்கும் நீர் வெளியேறாது தேங்கியுள்ள நிலையில், வாய்க்கால்களும் மூடப்பட்டுள்ளன.
இந்த நிலையில், வயல் நிலங்களில் காணப்படும் நீரை வெளியேற்றும் வகையில் வாய்க்கால் சுத்தம் செய்யப்பட்டு, இயந்திரங்கள் மூலம் நீரை இரைத்து வெளியேற்றி பயிர்களை காப்பாற்றும் முயற்சியில் மன்னார் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் எஞ்சியுள்ள விவசாய செய்கையை காப்பாற்ற முடியும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.