புலனாய்வாளர்களின் சரமாரியான தாக்குதலுக்கு இலக்கான இளைஞன்- கிளிநொச்சியில் சம்பவம்
In இலங்கை February 21, 2021 5:33 am GMT 0 Comments 1183 by : Yuganthini

வெற்றிலைக்கேணியில் புலனாய்வாளர்களின் கடுமையான தாக்குதலால் வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணியை சேர்ந்த ஒருவர், யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று (சனிக்கிழமை) பிற்பகல், வெற்றிலைக்கேணி வீதியில் பயணித்துக்கொண்டிருந்த இளைஞனை மறித்த புலனாய்வாளர்கள் எங்கே சென்று வருகிறாய் என கேட்டுள்ளனர்.
இதன்போது அதற்கு பதிலளித்த குறித்த இளைஞன், இது வீதி இதனால் போய்வர முடியாது என கேட்டுள்ளார். இதனை தொடர்ந்து குறித்த இளைஞனை விசாரிக்க வேண்டும் என்று அழைத்து, வெற்றிலைக்கேணி சுடலை பகுதியில் வைத்து புலனாய்வாளர்கள் கடுமையாக தாக்கியுள்ளனர்.
இதன்போது தனது மகனை புலனாய்வாளர்கள் அழைத்துச் சென்றதை கேள்வியுற்ற தாயார், சுடலை பகுதிக்கு ஓடோடி சென்றுள்ளார். அங்கு சென்ற தாயை கண்டதும் மகன் விம்மி விம்மி அழுதுள்ளார். ஏன் எனது மகனை அடித்தீர்கள் என புலனாய்வாளர்களை கேட்டதற்க்கு இல்லை தாங்கள் அடிக்கவில்லை என கூறியுள்ளனர்.
அதன்பின்னர் அவ்விடத்திலிருந்து மகனை அழைத்துச் சென்ற தாயார், அவரை யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்
குறித்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட இளைஞன், தற்போது யாழ்.போதனா வைத்தியசாலை 24ஆம் விடுதியில் சிகிச்சை பெற்று வருவதாக அவரது குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.