புலமைப் பரிசில் நிதியை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானம்!

தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் பிள்ளைகளுக்கான புலமைப் பரிசில் நிதியை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இது தொடர்பான அமைச்சரவை பத்திரத்தை அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் அமைச்சரவைக்கு தாக்கல் செய்துள்ளதுடன், அமைச்சரவை அதற்கு அனுமதி வழங்கியுள்ளது.
இதற்கமைய இதுவரை காலமும் மாதாந்தம் 500 ரூபாயாக இருந்த குறித்த தொகை 750 ரூபாயாக அதிகரிக்கப்படவுள்ளது.
இதுதவிர புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த விஷேட தேவையுடைய 250 பிள்ளைகளுக்கு புலமைப் பரிசில் வழங்குவதற்கு அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தாக்கல் செய்த அமைச்சரவை பத்திரத்திற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.