பெட்ரோல், டீசல் மூலம் இயங்கும் புதிய கார்கள்- வேன்களுக்கு 2030ஆம் ஆண்டு முதல் தடை!
In இங்கிலாந்து November 19, 2020 6:02 am GMT 0 Comments 1872 by : Anojkiyan

பெட்ரோல் மற்றும் டீசல் மூலம் இயங்கும் புதிய கார்கள் மற்றும் வேன்கள் 2030ஆம் ஆண்டு முதல் பிரித்தானியாவில் விற்பனை செய்யப்படாது என்று பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.
ஆனால், சில hybrids இன்னும் அனுமதிக்கப்படும், அவர் உறுதிப்படுத்தினார்.
புதிய பசுமை தொழில்துறை புரட்சிக்கான திட்டங்களின் ஒரு பகுதியாக இந்த அறிவிப்பு வெளியாகியாகியுள்ளன.
இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘இந்த ஆண்டு நாங்கள் எதிர்பார்த்த பாதைக்கு மிகவும் மாறுபட்ட பாதையை எடுத்து இருந்தாலும் பிரித்தானியா, எதிர்காலத்தை நோக்கி பசுமையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான வாய்ப்பை பயன்படுத்திக் கொள்கிறது.
நமது பொருளாதாரத்தை மீட்டெடுப்பது, பூமியின் பாதுகாப்புடன் கைகோர்த்துச் செல்ல வேண்டும். அடுத்த ஆண்டு கால நிலை உச்சி மாநாட்டை நடத்துவதற்கு நாங்கள் எதிர் நோக்குகையில் பசுமை தொழில்துறை புரட்சிக்கான ஒரு லட்சிய திட்டத்தை நான் வகுக்கிறேன். இது பிரித்தானியாவில் நாம் வாழும் முறையை மாற்றும்.
இது பகிரப்பட்ட உலகளாவிய சவால். உலகின் ஒவ்வொரு நாடும் நமது குழந்தைகள், பேரக்குழந்தைகள் மற்றும் அடுத்த தலைமுறையினருக்காக பூமியை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
2030ஆம் ஆண்டில் இருந்து பிரித்தானியாவில் புதிய பெட்ரோல் மற்றும் டீசல் கார்கள் மற்றும் வேன்களை விற்பனை செய்ய தடை விதிக்கப்படும். இந்தத் திட்டம் பிரித்தானியாவின் தேசிய உள்கட்டமைப்பை மின்சார வாகனங்களுக்கு சிறந்த ஆதரவாக மாற்றுவதில் கவனம் செலுத்தும். இதன் மூலம் வீதிப போக்குவரத்தை ‘டி கார்போனைஸ்’ (கார்பன் வாயு அளவை குறைத்தல்) செய்த முதல் ‘ஜி7′ நாடாக பிரித்தானியா திகழும்’ என கூறினார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.