பெண்களுக்கான சுகாதாரத் துவாய்களுக்கு விதிக்கப்பட்டிருந்த வரி நீக்கம் – அரசாங்கம்
In இலங்கை September 20, 2018 1:25 pm GMT 0 Comments 1482 by : ஜெயச்சந்திரன் விதுஷன்

பெண்களுக்கான சுகாதாரத் துவாய்களுக்கு விதிக்கப்பட்டிருந்த 40 வீத செஸ் வரியை நீக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
நிதி அமைச்சரின் தலைமையில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற கலந்துரையாடலின் போதே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக நிதி மற்றும் ஊடக அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்க்கு முன்னர் பெண்களுக்கான சுகாதாரத் துவாய்களுக்கு 102 வீத செஸ் வரி விதிக்கப்பட்டிருந்த நிலையில் இவ் அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.