பெண்களுக்கு எதிரான துன்புறுத்தல்கள்: நூற்றுக்கணக்கானோருக்கு அபராதம்

பெண்களுக்கு எதிரான துன்புறுத்தல்களை கட்டுப்படுத்தும் வகையிலான புதியசட்டத்தின் கீழ் பிரான்ஸ் நீதிமன்றத்தினால் நூற்றுக்கணக்கானோருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இப்புதிய சட்டத்திற்கு அமைவாக கடந்த எட்டு மாதங்களில் 447 பேருக்கு பிரான்ஸ் நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது.
பாலியல் ரீதியான ஆத்திரமூட்டல் செயற்பாடுகளுக்கு எதிரான இந்த புதியசட்டமானது கடந்த 2018ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் ஏற்படுத்தப்பட்டது. இதன்மூலம் இவ்வாறான சம்பவங்களில் ஈடுபடுவோருக்கு சம்பவ இடத்திலேயே 750 யூரோ வரை அபராதம் விதிக்கப்படும் வகையில் சட்டம் அமுல்படுத்தப்பட்டது.
இவ்வாறான துன்புறுத்தல்கள் தொடர்பாக முறைப்பாடுகளை முன்வைப்பதில் பெண்களுக்கு காணப்படும் சிரமங்களைப் போக்கும் வகையில் இந்தப் புதியசட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.