பெண்ணின் பார்வையில் டியர் சி.எஸ்.கே: வைரலாகும் காணொளிக்கதை
In கிாிக்கட் March 29, 2018 6:24 am GMT 0 Comments 1356 by : Velauthapillai Kapilan
ஐ.பி.எல் தொடரின் 11 வது பருவகாலப்போட்டி ஏப்ரல் மாதம் 7 ஆம் திகதி ஆரம்பமாகி மே மாதம் 27 ஆம் திகதி வரை நடைபெற உள்ளது.
இந்நிலையில் ஒரு பெண்ணின் பார்வையில் சென்னை சூப்பர் கிங்ஸ் எப்படிப்பட்டது என்பது குறித்து அனிமேஷன் துணையுடன் ஒரு குட்டிக்கதை உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த காணொளி 3000 சட்டங்கள் (Frames) கொண்ட கை ஓவியங்களால் உருவாக்கப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் மாதம் 26 ஆம் திகதி வெளியான இந்த காணொளி தற்போது யூடியூப்பில் முதற்தர காணொளியாக வைரலாகிவருகின்றமை (Trent) குறிப்பிடத்தக்கது.
மேலும் ஏப்ரல் 7 ஆம் திகதி நடைபெறும் முதல் ஐபிஎல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணி மோதவுள்ளமை ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.