பெண் உரிமை ஆர்வலர்களை தற்காலிகமாக விடுவித்தது சவுதி

நான்கு பெண் உரிமை ஆர்வாலர்களை சவுதி அரேபியா தற்காலிகமாக விடுதலை செய்துள்ளது.
இதன்மூலம் கடந்த இரண்டு மாதங்களில் விடுவிக்கப்பட்ட உரிமை ஆர்வலர்களின் எண்ணிக்கை ஏழாக அதிகரித்துள்ளது.
இணைய குற்றங்கள் தொடர்பான நாட்டின் சட்ட விதிகளுக்கமைய கடந்த ஓராண்டிற்கு முன்னர் 11 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் ஏழு பேர் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் எவ்வாறான நிபந்தனைகளின் அடிப்படையில் விடுவிக்கப்பட்டனர் மற்றும் மீண்டும் எப்போது சிறைக்கு திரும்ப வேண்டும் போன்ற விடயங்கள் தெளிவாக குறிப்பிடப்படவில்லை.
ஆனால், உரிமை ஆர்வலர்களின் விடுதலை தொடர்பாக சவுதி அரேபிய தரப்பில் எவ்வித கருத்துகளும் இதுவரை வெளியிடப்படவில்லை.
கடந்த ஆண்டு மே மாதம் கைது செய்யப்பட்ட உரிமை ஆர்வலர்களின் விடுதலையை வலியுறுத்தி சர்வதேச சமூகங்கள் றியாத் அரசாங்கத்திற்கு தொடர் அழுத்தங்களை பிரயோகித்து வந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.