பேச்சுவார்த்தை ஊடாக தீர்வு காண்போம்: மோடிக்கு இம்ரான் கான் மீண்டும் வலியுறுத்தல்
In இந்தியா May 3, 2019 8:49 am GMT 0 Comments 2392 by : Yuganthini

இரு நாட்டு பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தை ஊடாக தீர்வை பெற முடியுமென பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பிரதமர் நரேந்திர மோடிக்கு வலியுறுத்தியுள்ளார்.
கடந்த மாதம் நடைபெற்ற பாகிஸ்தானின் தேசிய தினத்தின்போது, அந்நாட்டின் பிரதமர் இம்ரான் கானுக்கு வாழ்த்து தெரிவித்து பிரதமர் மோடி கடிதமொன்றை அனுப்பி வைத்திருந்தார்.
இந்நிலையில் அக்கடிதத்துக்கு பதில் கடிதமொன்றை பிரதமர் மோடிக்கு இம்ரான் கான் அனுப்பி வைத்துள்ளார்.
தற்போதைய சூழ்நிலையில் இருநாடுகளுக்கு இடையில் நிலவும் பிரச்சினையை தீர்ப்பதற்கு பேச்சுவார்த்தையே அவசியமென இம்ரான் கான் வலியுறுத்தியுள்ளார்.
கடந்த வருடமும் இம்ரான் கான், பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் இருதரப்பு பேச்சு வார்த்தைக்கு அழைப்பு விடுத்திருந்த நிலையில் மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.