Pan Pacific பகிரங்க டென்னிஸ்: கரோலினா பிளிஸ்கோவா சம்பியன்
பெண்களுக்கான பேன் பசிபிக் பகிரங்க டென்னிஸ் தொடரில், செக் குடியரசின் முன்னணி டென்னிஸ் வீராங்கனையான, கரோலினா பிளிஸ்கோவா மகுடம் சூடியுள்ளார்.
இத்தொடரின் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில், 4ஆம் நிலை வீராங்கனையான செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா, 3ஆம் நிலை வீராங்கனையான ஜப்பானின் நவோமி ஒசாகாவை எதிர்கொண்டனர்.
மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில், 6-4, 6-4 என நேர்செட் கணக்கில் ஒசாகாவை வீழ்த்தி கரோலினா பிளிஸ்கோவா, சம்பியன் பட்டம் வென்றார்.
அண்மையில் நடைபெற்ற ஆண்டின் இறுதி கிராண்ட்ஸ்லாம் போட்டித் தொடரான, அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவில், ஜப்பானின் நவோமி ஒசாகா சம்பியன் பட்டம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜப்பானில் உள்ள டோக்கியோ நகரில், கடந்த 15ஆம் திகதி ஆரம்பமான பேன் பசிபிக் பகிரங்க டென்னிஸ் தொடர், பெண்களுக்கே உரித்தான தொடர் என நினைவுக்கூரத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.