பைசர் தடுப்பூசி குறித்த கவலைகளை நிராகரிக்கும் சுகாதார அமைச்சு
In ஆசிரியர் தெரிவு January 2, 2021 4:58 am GMT 0 Comments 1662 by : Jeyachandran Vithushan

தடுப்பூசியை பெற்றுக்கொண்ட பெண்ணொருவருக்கு மீண்டும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் பைசர் தடுப்பூசி குறித்த கவலைகளை இலங்கை சுகாதார அமைச்சு நிராகரித்துள்ளது.
எந்தவொரு தடுப்பூசியும் ஒரு சிறிய சதவீத தோல்வியைக் கொண்டிருக்கும் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
கலிபோர்னியாவில் பைசர் தடுப்பூசி பெற்றுக்கொண்ட 45 வயதான பெண் செவிலியர் ஒருவருக்கு மீண்டும் கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
வளரும் நாடுகள் விரைவில் தடுப்பூசியை பெற்றுக்கொள்ளும் முகமாக அவசரகால பயன்பாட்டிற்கான பைசர் மற்றும் பயோஎன்டெக் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு கடந்த வியாழக்கிழமை அங்கீகாரம் வழங்கியது.
இந்நிலையில் இலங்கையும் பைசர் மற்றும் பயோஎன்டெக் தடுப்பூசியை பெற்றுக்கொள்வதில் ஆர்வமாக இருப்பதாகவும் விரைவில் சிறந்த தடுப்பூசி குறித்து முடிவு செய்யப்படும் என்றும் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
தற்போது தடுப்பூசியின் பாதுகாப்பு மற்றும் செயற்திறனுக்கு மட்டுமே இலங்கை முன்னுரிமை கொடுப்பதாக தெரிவித்துள்ள அவர், அதனை பெற்றுக்கொள்வதற்கான விடயங்கள் இரண்டாம் நிலை இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.