பொங்கல் பரிசு: விடுபட்டவர்களுக்கு ஜன 18 – 25 வரை வழங்கப்படும் – தமிழக அரசு
In இந்தியா January 11, 2021 1:18 pm GMT 0 Comments 1364 by : Jeyachandran Vithushan

2500 ரூபாய் ரொக்கத்துடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பை வரும் 25 ஆம் திகதி வரை பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ரேசன் கடைகளில் கடந்த 4 ஆம் திகதி முதல் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வரும் நிலையில், 13 ஆம் திகதிக்குள் வழங்கி முடிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் குடும்ப அட்டைகாரர்களுக்கு விடுபடாமல் வழங்க ஏதுவாக 18 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை ரொக்கத்துடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பை வழங்க வேண்டும் என உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை ஆணையாளர் அறிவித்துள்ளார்.
பொங்கல் துணிப்பை பெறாதவர்களுக்கும் அதனை வழங்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.