பொங்கல் வெளியீட்டிற்கு தயாராகும் மாஸ்டர்?

தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர், இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் தீபாவளி அன்று மாலை 6 மணிக்கு மாஸ்டர் திரைப்படத்தின் டீசர், வெளியாகி யூடியூபில் மிக பெரிய சாதனை படைத்து வருகிறது.
மாஸ்டர் திரைப்படம் எப்போது வெளியாகும் என பலரும் எதிர்பார்த்து வருகின்றனர், மேலும் இப்படம் வரும் பொங்கல் அன்று திரைக்கு வரும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் இப்படத்தின் இப்படத்தின் தயாரிப்பாளர்களான சேவியர் பிரிட்டோ மற்றும் லலித் குமார் இருவரும் மாலை அணிந்தபடி புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.
இதை வைத்து பார்க்கும் போது மாஸ்டர் படம் பொங்கல் அன்று வெளியாக தயாராக இருப்பது போல் தெரிகிறது. மேலும் வெகு விரைவில் இதற்கான அறிவிப்பும் வரலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.