பொதுமக்களுக்கு இராணுவம் விடுத்துள்ள அவசர அறிவிப்பு
In இலங்கை April 24, 2019 7:37 am GMT 0 Comments 2361 by : Dhackshala

தீவிரவாத செயற்பாடுகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய சந்தேகத்துக்குரிய நபர்கள் மற்றும் வாகனங்கள் தொடர்பாக பொதுமக்கள் தகவல்களை வழங்குவதற்காக தொலைபேசி இலக்கங்களை இராணுவம் அறிமுகப்படுத்தியுள்ளது.
இதற்கமைய, 0112 43 42 51 அல்லது 011 40 55 105 அல்லது 011 40 55 106 முதலான தொலைபேசி இலக்கங்கள் ஊடாக இராணுவத் தலைமையகத்தின் குண்டு செயலிழப்பு பிரிவை தொடர்பு கொண்டு தகவல் வழங்க முடியும் என இராணுவத் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பாதுகாப்பு நிலைமைகளைக் கருத்திற்கொண்டே இந்த நடவடிக்கை மெற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.