பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் மக்களுக்கு வழங்கியுள்ள வாக்குறுதி!
In இலங்கை November 27, 2020 4:23 am GMT 0 Comments 1479 by : Yuganthini

நாட்டிலுள்ள அனைத்து மக்களினதும் பாதுகாப்பையும் நிச்சயம் உறுதி செய்வேன் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் கலாநிதி சரத் வீரசேகர தெரிவித்தார்.
ஜனாதிபதி செயலகத்தில், ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ முன்னிலையில் நேற்று (வியாழக்கிழமை), பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராக சரத் வீரசேகர சத்தியப் பிரமாணம் செய்துகொண்டார்.
அதனைத் தொடர்ந்து சமய நிகழ்வுகளில் கலந்துகொண்ட அவர், பௌத்த சமயத் தலைவர்கள் முன்னிலையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த நிகழ்வில் பாதுகாப்பு அமைச்சர் கலாநிதி சரத் வீரசேகர மேலும் கூறியுள்ளதாவது, “நாட்டில் வாழுகின்ற அனைத்து மக்களையும் பாதுகாப்பதே தற்போதேய முக்கிய கட்மையாக இருக்கின்றது.
அந்தவகையில் எனக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்பின் ஊடாக பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் அவர்களின் நன்மை ஆகியவற்றுக்கே முக்கியத்துவம் கொடுத்து செயற்படுவேன். இந்தப் பொறுப்பு எனக்காக அல்ல, பொதுமக்களுக்காக எனக்கு வழங்கப்பட்டுள்ளதாகும்.
ஆகவே, இந்த சேவையின் ஊடாக இலங்கை வாழ் சகல மக்களினதும் தேவைகளைப் பூர்த்தி செய்து, அவர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்வேன்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.