பொது நிறுவனங்களுக்கு பொருட்கள் வழங்கி வைப்பு
In இலங்கை September 7, 2018 9:57 am GMT 0 Comments 1731 by : Yuganthini

மன்னாரிலுள்ள பொது நிறுவனங்களுக்கு ஒரு தொகுதி உபகரணங்களை வடமாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.பிரிமூஸ் சிராய்வா இன்று (வெள்ளிக்கிழமை) கையளித்துள்ளார்.
சட்டத்தரணி எஸ்.பிரிமூஸ் சிராய்வா, தனது மாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதியின் கீழ் கொள்வனவு செய்யப்பட்ட ஒரு தொகுதி உபகரணங்களை இன்று கையளித்தார்.
பாடசாலைகள் மற்றும் பொது அமைப்புக்களின் தேவைகளுக்கு அமைவான தளபாடங்கள், அலுமாரி, கதிரைகள் மற்றும் பிரதி எடுக்கும் இயந்திரம் ஆகியவை வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
இன்று ஒழுங்கமைக்கப்பட்ட இரு வேறு நிகழ்வுகளில் ஒதுக்கப்பட்ட இரண்டு மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டின் கீழ் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகள் மற்றும் பொது நிறுவனங்கள், பாடசாலைகள் ஆகியவற்றுக்கே குறித்த பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.