பொது போக்குவரத்தை பயன்படுத்துபவர்களுக்கான முக்கிய அறிவிப்பு
In ஆசிரியர் தெரிவு December 15, 2020 7:42 am GMT 0 Comments 1576 by : Jeyachandran Vithushan

பொது போக்குவரத்தை பயன்படுத்துபவர்கள் நின்ற நிலையில் பயணம் செய்வது தனிமைப்படுத்தல் விதிமுறைகளின் கீழ் தடை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பயணிகள் போக்குவரத்து சேவைகள் தொடர்பாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இலங்கை பொலிஸாருக்கு இந்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளார்.
அதன்படி, பயணிகள் போக்குவரத்தின்போது இருக்கை வசதிக்கு ஏற்ப மட்டுமே பயணிகளை கொண்டு செல்ல முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அத்தகைய வாகனம் செல்லும் போது எந்த பயணிகளும் நின்ற நிலையில் பயணிக்ககூடாது என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.