பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை பேரணி – ரவிகரனிடம் விசாரணை
In இலங்கை February 15, 2021 5:22 am GMT 0 Comments 1404 by : Dhackshala

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையில் முன்னெடுக்கப்பட்ட பேரணி குறித்து தற்போது முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரனிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
குறித்த பேரணியில் கலந்துகொண்டமை தொடர்பாக விசாரணை செய்வதற்காக முல்லைத்தீவு பொலிஸார், துரைராசா ரவிகரனை விசாரணைக்கு அழைத்துள்ளனர்.
குறிப்பாக நேற்று அழைப்பாணையுடன் ரவிகரனின் வீட்டிற்கு முல்லைத்தீவு பொலிஸார் சென்றபோது ரவிகரன் வீட்டில் இருந்திருக்கவில்லை.
இந்நிலையில் இன்று (திங்கட்கிழமை) விசாரணை ஒன்றினை மேற்கொள்வதற்காக பொலிஸ் நிலையம் வருமாறு முல்லைத்தீவு பொலிஸார் ரவிகரனை அழைத்திருந்தனர்.
அந்தவகையில் பொலிஸாரின் அழைப்பினை ஏற்று ரவிகரன் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்திற்கு இன்று காலை சென்றுள்ளார்.
இதனையடுத்து, தற்போது ரவிகரனிடம் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.