பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான போராட்டத்திற்கு கூட்டமைப்பு ஆதரவு
In இலங்கை January 28, 2021 2:40 pm GMT 0 Comments 1673 by : Jeyachandran Vithushan

தமிழின அழிப்புக்கு எதிராக முன்னெடுக்கப்படவிருக்கும் கவனயீர்ப்பு போராட்டத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தனது ஆதரவை தெரிவிப்பதாக கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 3 ஆம் திகதி முதல் 6ஆம் திகதி வரை குறித்த போராட்டத்தை முன்னெடுக்க வடகிழக்கு சிவில் சமூக அமைப்புகள் விடுத்த அழைப்புத் தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அரசாங்கத்தினால் திணைக்களங்கள் ரீதியிலான ஆக்கிரமிப்பு தொடர்வதை வெளிக் கொண்டுவரும் வகையில் வடக்கு கிழக்கில் செயற்படும் சிவில் அமைப்புக்கள் பல இணைந்து விடுத்துள்ள அழைப்பிற்கு வலுச் சேர்க்கும் வகையில் கூட்டமைப்பும் தனது ஆதரவை வழங்கியுள்ளது.
இதேநேரம் குறித்த போராட்டத்தில் அனைவரும் பங்குகொண்டு வடக்கு கிழக்கில் உள்ள சுமார் 200 ற்கும் மேற்பட்ட பாரம்பரிய இந்து ஆலயங்களை கையகப் படுத்துவதற்கான முயற்சிகள், மனித உரிமை மீறல்களை வெளிக்கொண்டு வரவேண்டும் என்றும் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
அத்தோடு ஊடகவியலாளர்கள் மீதான மனித உரிமை மீறல்கள், போராட்டங்களை முன்னெடுத்து வரும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் அச்சுறுத்தப்படுவதுடன் அவர்களை தொடர்ந்தும் கண்காணிக்கப்படுவதையும்.
தமிழ் மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் சிங்கள குடியேற்றங்களை தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்றமை போன்ற செயல்களைக் கண்டித்து இடம்பெறும் இந்தப் போராட்டத்தில் அனைவரும் இணைந்து கொள்ள வேண்டும் என்ற அழைப்பினையும் கூட்டமைப்பு விடுத்துள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.