பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையில் அகிம்சை வழி போராட்டம்: யாழில் விசேட ஆலோசனைக் கூட்டம்
In இலங்கை February 1, 2021 9:40 am GMT 0 Comments 1387 by : Yuganthini
பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான அகிம்சை வழி போராட்டம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம், சிவில் அமைப்புக்கள் மற்றும் ஒன்றிணைந்த தமிழ் தேசிய கட்சிகளின் பிரதிநிதிகளின் பங்களிப்புடன் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுவருகிறது.
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி வளாகத்திலுள்ள தந்தை செல்வா கலையரங்க மண்டபத்தில் இன்று (திங்கட்கிழமை) முற்பகல் 11.40 மணிக்கு ஆரம்பமாகி இந்தக் கூட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
வடக்கு மாகாண சிவில் சமூக அமைப்புகள் மற்றும் தமிழ் தேசிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
தமிழ் பேசும் மக்களின் பூர்வீக நிலங்கள் உட்பட இலங்கை முழுவதும் திட்டமிட்டு நடாத்தப்படும் இன அழிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராகவும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கு வட.கிழக்கு தமிழ் கட்சிகள் மற்றும் சிவில் சமூக அமைப்புகள், பல்சமய ஒன்றியங்கள் இணைந்து அனுப்பி வைக்கப்பட்ட கோரிக்கைகளை நடைமுறைபடுத்த கோரியும் வட.கிழக்கு சிவில் சமூக அமைப்புக்கள் பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை நாளை மறுதினம் 3 ஆம் திகதி முதல் 6ஆம் திகதி வரை நான்கு நாட்கள் நடாத்துவதற்கு தீர்மானித்துள்ளன.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.