‘பொத்துவில் முதல் பொலிகண்டி வரை’ போராட்டத்தில் முஸ்லிம் மக்கள் இணைவு!
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அட்டாளைச்சேனையில் முஸ்லிம்களும் பேரணியில் இணைந்துகொண்டனர்.
தமிழர் தாயகத்தில் முன்னெடுக்கப்படும் அத்துமீறல்கள், பௌத்த மயமாக்கல் உட்பட பல்வேறு பிரச்சினைகளை முன்னிறுத்தி வடக்கு கிழக்கு மாகாண சிவில் அமைப்புகளின் கோரிக்கைக்கு அமைவாக பொத்துவிலில் இருந்து வாகன பேரணி நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.
பேரணியில் கலந்துகொண்டவர்கள் ஆலையடிவேம்பில் இருந்து அட்டாளைச்சேனை ஊடாக மட்டக்களப்பு நோக்கிச் சென்றபோது அதற்கு ஆதரவாக பெருமளவான முஸ்லிம்கள் இணைந்துகொண்டதுடன் முஸ்லிம் காங்கிரசின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நசீரும் இணைந்தார்.
இதன்போது, ஜனாசா எரிப்பு மற்றும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, தமிழர்களின் நில ஆக்கிரமிப்பினைத் தடுத்து நிறுத்து உட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தும் வகையிலான கோசங்களும் எழுப்பப்பட்டன.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.