பொன்மலையில் போராட்டம்: 400க்கும் மேற்பட்டோர் கைது
In இந்தியா May 3, 2019 10:22 am GMT 0 Comments 2189 by : Yuganthini

தமிழர்களுக்கு வேலை வழங்க கோரி பொன்மலை ரயில்வே பணிமனை முன்பாக போராட்டமொன்று நடத்தப்பட்டுள்ளது. இதன்போது போராட்டத்தில் ஈடுபட்ட 400க்கும் மேற்பட்டோரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
தமிழ் தேசிய பேரியக்கத்தின் ஏற்பாட்டில் குறித்த போராட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) நடத்தப்பட்டுள்ளது.
மேலும் போராட்டத்தில் ஈடுபட்டோர், தமிழ்நாட்டிலுள்ள மத்திய அரசின் அலுவலகங்களில் தமிழக இளைஞர்களுக்கு வேலை வழங்க வேண்டுமென கூறி கோஷம் எழுப்பினர்.
இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டமையால், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸார், போராட்டத்தை நடத்திய 400 பேரையும் கைது செய்துள்ளனர்.
குறித்த போராட்டத்தில் பெண்கள், குழந்தைகள், தொழிலாளர்கள் என 400க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டிருந்தனர்.
திருச்சி, பொன்மலை ரயில்வே பணிமனையில் வட.மாநிலங்களை சேர்ந்தவர்கள் அதிகளவில் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
அந்தவகையில் அண்மையில் பழகுனர் பணியிடத்தில் ஒரே நேரத்தில் வட.மாநிலங்களை சேர்ந்த 300 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஆனால் குறித்த நியமனங்களுக்கு தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டமையை கண்டித்தே தமிழ் தேசிய பேரியக்கத்தின் ஏற்பாட்டில் இந்த போராட்டம் இன்று நடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.