பொருளாதார தடைக்கு மத்தியில் சீனாவிற்கு கச்சா எண்ணெயை அனுப்பியது ஈரான்!
In அமொிக்கா October 19, 2018 2:39 pm GMT 0 Comments 1841 by : ஜெயச்சந்திரன் விதுஷன்

ஈரான் மீதான பொருளாதார தடை விதிக்கப்படவுள்ள நிலையில், 22 மில்லியன் பீப்பாய் கச்சா எண்ணெயை அந்நாட்டு அரசு சீனாவுக்கு அனுப்பி வைத்துள்ளது.
சீனாவின் டலியன் (Dalian) துறைமுக நகரில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் சேமிப்பு வசதிகள் அதிகம்.
கடந்த 2014 ஆம் ஆண்டு ஈரான் மீது தடை விதிக்கப்பட்ட போது, அந்நாட்டு அரசு இங்கு எண்ணெயை இறக்குமதி செய்து சேமித்து வைத்தது.
தற்போது நவம்பர் 4 ஆம் திகதி முதல் அமெரிக்காவின் பொருளாதார தடையை ஈரான் சந்திக்கவுள்ளதால், இதேபோல் எண்ணெய்யை சேமித்து வைக்க முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
22 மில்லியன் பீப்பாய் கச்சா எண்ணெய்யை ஏற்றிக் கொண்டு ஈரான் கப்பல்கள், டலியன் துறைமுகம் நோக்கி செல்வதாகக் தகவல் வெளியாகியுள்ளது.
நவம்பருக்கு முன்னதாகவே கப்பல்கள் துறைமுகம் வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.