பொலிகண்டி நோக்கிய பேரெழுச்சிப் பேரணி: கிளிநொச்சியில் இருந்து பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்பு!
பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரெழுச்சிப் பேரணி கிளிநொச்சி டிப்போ சந்தியில் இருந்து பொலிகண்டி நோக்கி இன்று காலை ஆரம்பமானது.
இந்நிலையில், கிளிநொச்சியில் பல்லாயிரக் கணக்கானோர் பேரணியுடன் இணைந்துள்ள நிலையில், பொலிகண்டி நோக்கிய பயணம் தற்போது முகமாலையைச் சென்றடைந்துள்ளது.
குறித்த பேரணியின் நான்காம் நாள் நேற்று கிளிநொச்சி டிப்போ சந்தியில் நிறைவடைந்த நிலையில், இன்று காலை ஒன்பது மணியளவில் ஆரம்பமான பேரணிக்கு கிளிநொச்சி மாவட்ட மக்கள் வரவேற்பளித்தனர்.
கிளிநொச்சி டிப்போ சந்தியிலிருந்து கரடிப்போக்குவரை பேரணி சென்று பின்னர் பரந்தன் பகுதியில் போராட்டம் இடம்பெற்றது. இந்நிலையில், கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டுவந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் மற்றும் விடுதலைப் புலிகளுக்கு உதவிய சந்தேக்தின் பேரில் கைதானவர்களின் உறவுகள் குறித்த பேரணியுடன் இணைந்துகொண்டனர். இதன்போது, மாற்றுத்திறனாளிகள், விழிப்புலனற்றோர் சங்கம் என பலரும் பரந்தன் பகுதியில் பேரணிக்கு ஆதரவு வழங்கியிருந்தனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.