பொலிவியாவில் கொக்கெய்ன் பயிர்ச்செய்கையாளர்கள் ஆர்ப்பாட்டம்!
In உலகம் September 6, 2018 7:28 am GMT 0 Comments 1369 by : Farwin Hanaa
பொலிவியாவின் லா பாஸ் நகரில் ஆயிரக்கணக்கான கொக்கெய்ன் தோட்ட தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள் இணைந்து பாரிய ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.
அரசாங்கத்திற்கு எதிரான வன்முறையில் ஈடுபடுவதாக பொலிவியா ஜனாதிபதி ஈவோ மோரெல்ஸ், கொக்கெய்ன உற்பத்தியாளர்கள் மீது குற்றஞ்சாட்டியதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நேற்று (புதன்கிழமை) கொக்கெய்ன் பயிர்ச்செய்கையாளர்கள் லா பாஸ் நகரில் ஆர்ப்பாட்டமொன்றினை நடத்தியுள்ளனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களில் அதிகமானோர், யங்காஸ் மலைத் தொடர் மற்றும் கிழக்கு அந்தீஸ் காட்டுப் பகுதியைச் சேர்ந்தவர்கள் என குறிப்பிடப்படுகிறது.
அந்தீஸ் பகுதியில் கொக்கெய்ன் பயிர்செய்கையில் ஈடுபடும் இருவரை அரசாங்கத்தினால் அனுப்பிவைக்கப்பட்ட விஷேட துப்பாக்கிதாரிகள் கொலை செய்ததாக அங்கு கூடியிருந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
பயிர்ச்செய்கையே தமது ஜீவனோபாயமாகும் என்றும் அதனைக் கைவிட்டால் தாங்கள் பட்டினியால் இறக்க நேரிடுமென்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.
எனினும், கொக்கெய்ன் பயிர்ச்செய்கையை தடைசெய்ய வேண்டுமென பொலிவியாவின் நேச நாடுகளான கொலம்பியா மற்றும் பெரு குறிப்பிட்டதாக பொலிவிய ஜனாதிபதி ஈவோ மோரெல்ஸ் சுட்டிக்காட்டினார். அதனைடுத்தே ஆர்ப்பாட்டம் வெடித்துள்ளது.
இதேவேளை, குறித்த ஆர்ப்பாட்டத்திற்கு அந்நாட்டுப் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் கொக்கெய்ன் பயிர்ச்செய்கைக்கு எதிரானவர்கள் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.