பொலிவியாவில் வரலாறு காணாத வெள்ளம் – 13ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இடம்பெயர்வு: ஐவர் மாயம்
In உலகம் January 19, 2021 3:29 am GMT 0 Comments 1264 by : Dhackshala

பொலிவியா நாட்டில் பெய்த கனமழை காரணமாக அங்கு வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
பொலிவியாவின் கோச்சபம்பா பகுதியில் பெய்த கனமழையால் டகீனா நதி நிரம்பி வழிகின்றதால், வெள்ளம் மற்றும் மண் சரிவுகள் ஏற்பட்டுள்ளன.
இதன் காரணமாக ஐவர் காணாமல் போயுயள்ளனர் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், அவர்களை தேடும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் வீடுகளுக்குள்ளும் வெள்ளம் புகுந்துள்ளதால் மக்கள் தங்களின் உடைமைகளுடன் பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றுள்ளனர்.
அதன்படி இதுவரையில் அங்கு 13ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இந்த அனர்த்தத்தினால் கால்நடைகள் அதிகமாக உயிரிழந்துள்ளன. அதன்படி இந்த வெள்ளத்தில் சிக்கி 17ஆயிரம் கோழிகள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.