பொள்ளாச்சி சம்பவம் – சிறப்பு புலனாய்வு குழுவினரை அமைக்கவேண்டுமென கோரிக்கை!
In இந்தியா April 27, 2019 11:53 am GMT 0 Comments 2446 by : Krushnamoorthy Dushanthini

பொள்ளாச்சி பாலியல் துஷ்பிரயோக வழக்கை சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரணைகளை மேற்கொள்ள வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு இன்று (சனிக்கிழமை) நீதிபதி வி.கே.தஹிலரமானி, நீதிபதி எம்.துரைசாமி அமர்வு முன்பு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இந்த வழக்கினை விசாரணை செய்த நீதிபதிகள் ஜுன் ஏழாம் திகதிக்கு வழக்கினை ஒத்தவைத்துள்ளனர்.
இதேவேளை இந்த வழக்கு குறித்து தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உளவியல் ஆலோசனை உள்ளிட்ட உதவிகள் வழங்க அனைத்து மாவட்டங்களிலும் ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி தலைமையில் விசாரணை குழு அமைக்கப்படவேண்டும்.
சம்பவத்தின்போது எஸ்.பி.யாக இருந்த பாண்டியராஜன், எஸ்.ஐயாக இருந்த ராஜேந்திர பிரசாத் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும். பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பத்தில் நடந்த உண்மையைக் கண்டறியும் குழுவை அமைக்க வேண்டும்.
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்த வழக்கை விசாரிக்க டிஐஐ அந்தஸ்துக்கு குறையாத பெண் அதிகாரி தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழுவினை அமைக்கவேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர்.
பொள்ளாச்சியில் பெண்களை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் திருநாவுக்கரசு, செந்தில், சபரிராஜன் ஆகியோர் கைதுசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.