போதைப்பொருள் விவகாரங்களை கண்டறிய அதிரடி நடவடிக்கை
In இலங்கை September 18, 2018 2:46 am GMT 0 Comments 1582 by : Yuganthini

ஹெரோயின் உள்ளிட்ட விஷ போதைப்பொருள்கள் தொடர்பாக கண்டறிவதற்கு பொலிஸ் தலைமையகத்தில் விசேட பிரிவு ஒன்றை பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர உருவாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அந்தவகையில் பொலிஸ்மா அதிபரின் நேரடி கண்காணிப்பின் கீழ் உருவாக்கப்பட்டுள்ள இந்த விசேட பிரிவானது, இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 6 மணி தொடக்கம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
குறித்த செயற்பாடு அடுத்த மறு அறிவித்தல் வரும் வரை, 24 மணித்தியாலங்கள் இந்த விசேட சேவையானது காணப்படுமெனவும் கூறப்பட்டுள்ளது.
மேலும் இவ்விடயங்கள் தொடர்பாக தகவலை வழங்ககூடியவர்கள் 011-3024803, 011-3024815, 011-3024820, 011-3024848, 011-3024850, ஆகிய ஐந்து தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொண்டு தகவலை வழங்கமுடியுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.