போராட்டத்தில் உயிர்நீத்தவர்களின் ஒளிப்படங்களை வைத்திருப்பதில் தவறில்லை – செல்வம்
In ஆசிரியர் தெரிவு May 8, 2019 6:21 am GMT 0 Comments 2296 by : Dhackshala
விடுதலைப் போராட்டத்தில் உயிர்நீத்த உறவுகளின் ஒளிப்படங்களை வைத்திருப்பது எந்தவிதத்திலும் சட்டவிரோதமற்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் குழுக்களின் பிரதி தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
கோண்டாவிலில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஸ்ரீ சபாரத்தினத்தின் நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும். விடுதலை போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் ஒளிப்படங்களை மக்கள் வைத்திருப்பது சட்டத்திற்கு முரணானதாக இருக்காது.
மீண்டும் எம் மக்களின் மீது இந்த அரசாங்கம் அடக்குமுறையைக் கொண்டுவரும் இந்நேரத்தில், அதனை நாம் எதிர்க்கவில்லையென்றால் எங்களுடைய மக்களை நாமே காப்பாற்ற முடியாதவர்களாகிவிடுவோம்” என தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.