போராட்டத்தில் கலந்துகொண்டவர்களை விசாரிப்பது மக்கள் போராட்டத்தை நிராகரிப்பதாகும் – இராதாகிருஷ்ணன்
In இலங்கை February 20, 2021 10:54 am GMT 0 Comments 1217 by : Dhackshala
போராட்டத்தில் கலந்துகொண்டவர்களை விசாரிப்பது மக்கள் போராட்டத்தை நிராகரிப்பதாகும் என நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வே.இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.
ஹட்டனில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற ஊடகச் சந்திப்பிலேயே அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
இதன்போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், “பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான போராட்டம் என்பது ஜனநாயக போராட்டமாகும்.
ஆனால் தற்போது அந்த போராட்டத்தில் கலந்துகொண்டவர்களை விசாரிப்பது மக்கள் போராட்டத்தை நிராகரிப்பதாகும்.
இதேவேளை, அமைச்சர் விமல் வீரவன்ச அரசாங்கத்திற்கு உள்ளேயே இருந்துகொண்டு அரசாங்கத்தை விமர்சிப்பது ஒரு நடகமாகும்.
மேலும் இந்தியாவை பகைத்துக்கொண்டு ஏனைய நாடுகளுடன் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்வது ஆபத்தானது. ஆகவே நண்பனை பகைத்துக்கொண்டு செயற்படுவதை மாற்றிக்கொள்ள வேண்டும்” என மேலும் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.