போரில் உயிரிழந்த மக்களுக்காக பொதுவான ஒரு நினைவுத்தூபி கட்டப்பட வேண்டும்- டக்ளஸ்
In இலங்கை January 10, 2021 6:49 am GMT 0 Comments 1672 by : Yuganthini
போரில் உயிரிழந்த மக்களுக்காக பொதுவான ஒரு நினைவுத்தூபி கட்டப்பட வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
மேலும், யாழ்.பல்கலைக்கழக நினைவுத்தூபியானது சுயலாப நோக்கோடு அமைக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
திருகோணமலையில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார். டக்ளஸ் தேவானந்தா மேலும் கூறியுள்ளதாவது, “உரிய அனுமதி பெறப்படாமல் சட்டத்திற்கு முரணாக அமைக்கப்பட்ட காரணத்தினாலேயே குறித்த தூபி இடிக்கப்பட்டதா யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் கூறியுள்ளார்.
மேலும் நீண்ட காலத் திட்டமிடல் இன்றி குறுகிய காலச் சிந்தனையுடன் மேற்கொள்ளுகின்ற தீர்மானங்கள் எந்தளவு அவமானத்தையும் அசௌகரியங்களையும் ஏற்படுத்தும் என்பதை இந்தச் சம்பவமும் வெளிப்படுத்தியுள்ளது.
கடந்த ஆட்சிக் காலத்தில் யுத்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவு கூருவதற்கான பொதுவான தூபி அமைக்கப்பட வேண்டும் என்று தனிநபர் பிரேரணை கொண்டு வந்தேன். இதன்போது தமிழ் பிரதிநிதிகளின் போதிய ஒத்துழைப்பு இன்மையினால் தொடர்ந்தும் முன்னெடுக்க முடியவில்லை.
எனவே எதிர்வரும் அமைச்சரவையில் குறித்த விடயம் தொடர்பாக பிரஸ்தாபிக்க இருக்கின்றேன்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.