போர்த்துக்கல்லில் காடுகளைப் புனரமைக்கும் திட்டம்
In ஏனையவை March 26, 2018 7:11 am GMT 0 Comments 1446 by : Suganthini
போர்த்துக்கல்லில் தீ விபத்தினால் பாதிக்கப்பட்ட காடுகளைப் புனரமைக்கும் திட்டத்தை, அந்நாட்டு அதிகாரிகள் முன்னெடுத்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த வருடத்தில் காட்டுத்தீயினால் பாதிக்கப்பட்ட பைன் (pine) காட்டைப் புனரமைக்கும் திட்டத்தை அதிகாரிகள் முன்னெடுத்த நிலையில், 67 ஆயிரத்து 500 மரக்கன்றுகளை நாட்டும் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இம்மரக்கன்றுகளை நாட்டும் நடவடிக்கையில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
முதற்கட்ட நடவடிக்கையாக 67 ஆயிரத்து 500 மரக்கன்றுகளை நாட்டும் திட்டத்தை முன்னெடுத்துள்ளதாகவும், இக்காட்டை முழுமையாகப் புனரமைக்க 30 மில்லியன் கன்றுகள் தேவைப்படுவதாகவும், புனரமைப்பு முயற்சிக்குரிய அமைப்பாளர்களில் ஒருவரான அலெக்ஸாந்திரா செரோடியோ (Alexandra Serodio) தெரிவித்துள்ளார்.
லிரியா (Leiria) பகுதியிலுள்ள மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக பைன் (pine) காடு காணப்படுவதுடன், கடந்த ஒக்டோபரில் பரவிய காட்டுத்தீயினால் இக்காடு மிக மோசமாகப் பாதிக்கப்பட்டது. இதன்போது, 80 சதவீதத்துக்கும் மேற்பட்ட பகுதி தீயினால் எரிந்து நாசமாகிய அதேவேளை, காட்டுத்தீயினால் 114 பேர் உயிரிழந்திருந்தனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.