போர்த்துக்கல்லில் கோர விபத்து – 28 ஜெர்மனிய சுற்றுலாப் பயணிகள் பரிதாப உயிரிழப்பு!
போர்த்துக்கல் தீவான மடெய்ரா (Madeira) என்ற தீவில், ஜெர்மனிய சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச்சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதில் 28 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
அத்துடன் மேலும் 28 பேர் படுகாயமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த விபத்து இன்று (புதன்கிழமை) இரவு இடம்பெற்றுள்ளது.
குறித்த பேருந்து வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி குடியிருப்புக்கள் உள்ள தாழ்ந்த பகுதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இது குறித்து அப்பகுதி மேயர் பிலிப் சௌஷா தெரிவிக்கையில், “இந்த கோர விபத்தை என்னால் விபரிக்க முடியவில்லை. இந்த மக்களுடைய துன்பங்களை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.
குறித்த பேருந்தில் 55 பேர் பயணித்துள்ளனர். அவர்களில் 17 பெண்கள் உட்பட 28 பேர் உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த 28 பேர் அருகிலுள்ள வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.