போலந்தில் கொவிட்-19 தொற்றினால் 40ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

போலந்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக 40ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, போலந்தில் மொத்தமாக 40ஆயிரத்து 177பேர் வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.
உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 14ஆவது நாடாக விளங்கும் போலந்தில், 15இலட்சத்து 70ஆயிரத்து 658பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், ஏழாயிரத்து எட்டு பேர் பாதிக்கப்பட்டதோடு 456பேர் உயிரிழந்துள்ளனர்.
வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட இரண்டு இலட்சத்து ஆறாயிரத்து 380பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் ஆயிரத்து 267பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர்.
தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 13இலட்சத்து 24ஆயிரத்து 101பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.