போலியோ சொட்டு மருந்து கொடுக்க பெற்றோர் தயக்கமின்றி முன்வர வேண்டும்
In இந்தியா January 31, 2021 3:26 am GMT 0 Comments 1437 by : Jeyachandran Vithushan

குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்க பெற்றோர் தயக்கமின்றி முன்வர வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கேட்டுக்கொண்டுள்ளார்.
கொரோனா காலகட்டமாக இருந்தாலும் கூட 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து கொடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் மகப்பேறு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை பிரிவு தொடங்கப்பட்டு, அறுவை சிகிச்சை மூலமாக பிறந்த குழந்தை மற்றும் தாய் ஆகியோரைக் அமைச்சர் விஜயபாஸ்கர் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து கொடுக்க விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இதேவேளை இன்று (ஞாயிற்றுக்கிழமை) தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாமை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.