பௌத்த மக்கள் ஏனையவர்களுக்கு முன்மாதிரியாகத் திகழ வேண்டும்: தம்மாலங்கார தேரர்!
In இலங்கை March 20, 2018 4:11 pm GMT 0 Comments 1331 by : Vithushagan

சிங்கள பௌத்த மக்கள் ஏனைய இனத்தவர்களுக்கு முன்மாதிரியாக திகழ வேண்டும் என இத்தேபான தம்மாலங்கார தேரர் தெரிவித்துள்ளார்.
கண்டி பிரதேசத்தில் ஏற்பட்ட வன்முறைகளினால் பாதிக்கப்பட்ட இடங்களைப் பார்வையிட்ட பின்னர் இன்று (செவ்வாய்க்கிழமை) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த தம்மாலங்கார தேரர்,’கண்டிப் பிரதேசத்தில் ஏற்பட்ட சிறிய சம்பவம் அமைதியற்ற இன மோதலாக மாறியமை வேதனைக்குரியதாகும். அனைத்து இனங்களையும் மதித்து நடக்கும் மனப்பான்மை பௌத்தர்களுக்கு இருக்கவேண்டும்.
சொத்துக்களை அழித்து, மக்களின் வாழ்வில் பாதிப்புக்களை ஏற்படுத்தியவர்களுக்கு தண்டனை வழங்குவது அரசாங்கத்தின் பொறுப்பும் கடமையுமாகும்.
அனைத்து மக்களும் நாட்டில் ஒற்றுமையாக வாழ்வதற்கான சூழ்நிலைகள் அரசாங்கத்தினால் ஏற்படுத்திக் கொடுக்கப்படவேண்டும்.இனிமேலும் இவ்வாறான சம்பவங்கள் ஏற்படுவதை பௌத்த மக்கள் தடுப்பதற்கு முயற்சிகளை எடுக்கவேண்டும்’ என அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.