மகாவலி அதிகார சபையின் புதிய பணிப்பாளர் நாயகமாக சரத் சந்திரசிறி விதான நியமனம்!

இலங்கை மகாவலி அதிகார சபையின் புதிய பணிப்பாளர் நாயகமாக ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் சரத் சந்திரசிறி விதான நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து, ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் இருந்து இன்று (வியாழக்கிழமை) அவர் தனது நியமனக் கடிதத்தை பெற்றுக்கொண்டார்.
இலங்கை நிர்வாக சேவையின் சிரேஷ்ட அதிகாரியான சரத் சந்திரசிறி விதான, பல்வேறு அமைச்சுக்களின் செயலாளராகவும் மேலதிக செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.
இதேவேளை மத்திய சுற்றாடல் அதிகார சபையின் புதிய பணிப்பாளராக சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சந்திரரத்ன பல்லேகம நியமிக்கப்பட்டுள்ளார்.
திறமைவாய்ந்த நிர்வாக சேவை அதிகாரியான சந்திரரத்ன பல்லேகம நிர்வாக சேவையில் நீ்ண்ட அனுபவம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.