மகிழ்ச்சியான நாடுகளில் முதலிடத்தில் பின்லாந்து
In ஏனையவை March 16, 2018 8:01 am GMT 0 Comments 1485 by : Suganthini

உலகில் மிக மகிழ்ச்சியாக மக்கள் வாழும் நாடாக இந்த வருடம் பின்லாந்து தெரிவுசெய்யப்பட்டுள்ளது.
156 நாடுகளை மையப்படுத்தி ஐ.நா. சபையால் மேற்கொள்ளப்பட்ட ஆய்விலேயே பின்லாந்து முதலிடத்திலுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில், உலகில் மிக மகிழ்ச்சியாக மக்கள் வாழும் நாடுகளில் இதுவரைகாலமும் முதலிடத்தைப் பெற்றுவந்த நோர்வேயை பின்லாந்து பின்னுக்குத் தள்ளியுள்ளது.
இந்நிலையில் பின்லாந்து முதலாவதிடத்திலும், நோர்வே இரண்டாவதிடத்திலும், டென்மார்க் மூன்றாவதிடத்திலும், ஐஸ்ஸிலாந்து நான்காவதிடத்திலும், சுவிட்ஸர்லாந்து ஐந்தாவதிடத்திலும் உள்ளன.
மேலும், இந்தப் பட்டியலில் அமெரிக்கா 18ஆவதிடத்தில் தள்ளப்பட்டுள்ளதுடன், இந்தியா 133ஆவதிடத்திலுள்ளது.
ஊழல் ஒழிப்பு, சமூக விடுதலை, பணப்புழக்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு ஐ.நா.வின் நிலையான அபிவிருத்தித் தீர்வுகள் கட்டமைப்பு எனும் அமைப்பு கடந்த சில மாதங்களாக உலகில் மகிழ்ச்சியாகவுள்ள நாடுகள் தொடர்பாக ஆய்வு நடத்தியது. இணையத்தளம் மூலம் நடத்தப்பட்ட ஆய்வின் முடிவே தற்போது வெளியாகியுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.