மக்களவைத் தேர்தலில் வாக்களித்தார் மோடி
In இந்தியா April 23, 2019 3:39 am GMT 0 Comments 2338 by : Yuganthini

மக்களவைத் தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி தனது வாக்கினை பதிவு செய்துள்ளார்.
அகமதாபாத்திலுள்ள ராணிப் வாக்குச்சாவடியில் பிரதமர் மோடி தனது வாக்கினை பதிவு செய்து ஜனநாயக கடமையை நிறைவேற்றியுள்ளார்.
குறித்த தேர்தலில் தனது வாக்கிளை பதிவு செய்வதற்கு முன்னர் குஜராத் காந்திநகரிலுள்ள தனது தாயின் இல்லத்திற்கு சென்ற மோடி, அவரிடம் ஆசி பெற்றுள்ளார்.
குஜாரத்திலுள்ள 26 தொகுதிகளுக்கும் கேரளாவின் 20 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு தற்போது இடம்பெறுகின்றது.
மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் 2 கட்டங்களாக 186 தொகுதிகளில் வாக்குப்பதிவு இதுவரை நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.