மக்களவை தேர்தல்: காணொளி வெளியீடு – 4 பேர் மீது வழக்குத்தாக்கல்
In இந்தியா April 19, 2019 3:24 am GMT 0 Comments 2306 by : adminsrilanka

மக்களவை தேர்தலில் வாக்கு பதிவுசெய்வதை காணொளியாக பேஸ்புக்கில் வெளியிட்டது தொடர்பாக 4 பேர் மீது பொலிஸார் வழக்குத்தாக்கல் செய்துள்ளனர்.
மராட்டிய மாநிலம் உஸ்மானாபாத் நாடாளுமன்ற தொகுதியில் நேற்று (வியாழக்கிழமை) வாக்குப்பதிவு இடம்பெற்றது
இதன்போது வாக்குச்சாவடியில் நபர் ஒருவர் வாக்கு பதிவு செய்வதை காணொளி எடுத்துள்ளார். அதேநேரம் தேசியவாத காங்கிரசுக்கு வாக்குப் போடுங்கள் என்றும் கூறியுள்ளார். அதன்பின்னர் அந்த கானொளியை பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில் தேர்தல் அதிகாரியின் கவனத்துக்கு இச்சம்பவம் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து அந்த நபர் பொலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இச்செயல் தேர்தல் விதிமீறல் என்பதால் அவர் உட்பட 4 பேர் மீது பொலிஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதேவேளை பேஸ்புக்கில் தற்போது குறித்த காணொளி நீக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 38 மக்களவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவுகள் நேற்று நிறைவு பெற்றிருந்தன. காலை 7 மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட வாக்களிக்கும் நடவடிக்கையில் மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.