குண்டுவெடிப்பில் மரணித்த உறவுகளுக்கு கண்ணீருக்கு மத்தியில் இறுதிக் கிரியைகள்
In ஆசிரியர் தெரிவு April 24, 2019 3:27 pm GMT 0 Comments 2525 by : Litharsan
ஈஸ்டர் தினத்தன்று கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம் உட்பட கொழும்பின் பல்வேறு பகுதிகளிலும் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களின் இறுதிக் கிரியைகள் கட்டம் கட்டமாக நடைபெற்று வருகின்றன.
நேற்றைய தினம் கொழும்பு மாதம்பிட்டிய பொது மயான பூமியில் எட்டுப் பேரின் பூதவுடல்கள் நல்லடக்கம் செய்யப்பட்டன.
இந்நிலையில் இன்று (புதன்கிழமை) 6 பேரின் இறுதிக் கிரியைகள் இடம்பெற்றன.
இதில் கத்தோலிக்கர்கள் மட்டுமன்றி, இந்து மற்றும் பௌத்த மதங்களைச் சேர்ந்தவர்களும் அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.