News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • மைத்திரி -மஹிந்த கூட்டணியை இறுதி செய்ய ஆறு பேர் கொண்ட குழு!
  • லிபரல் அரசாங்கத்தின் வரவு – செலவுத் திட்டம் மார்ச்சில்!
  • விஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ் ட்ரெய்லர்
  • இலங்கை – சீன உறவுகளை விரிவுபடுத்துவது குறித்து புதுடெல்லியில் பேச்சு!
  • முதலீடுகளை மேற்கொள்வதற்காக அமெரிக்காவுக்கு பகிரங்க அழைப்பு!
  1. முகப்பு
  2. இலங்கை
  3. மக்களின் பணத்தில் ஆடம்பர வாகனம் தேவையில்லை – ரி.எம்.வி.பி. பிரமுகர் காந்தராஜா

மக்களின் பணத்தில் ஆடம்பர வாகனம் தேவையில்லை – ரி.எம்.வி.பி. பிரமுகர் காந்தராஜா

In இலங்கை     September 9, 2018 9:59 am GMT     0 Comments     1459     by : Benitlas

மட்டக்களப்பு மாநகரசபையில் பொதுமக்களின் தேவை கருதியே செலவுகளை மேற்கொள்ள வேண்டும் எனவும், அநாவசியமான ஆடம்பர செலவுகளுக்கு மக்களின் பணங்களை வீண்விரயம் செய்வதை ஏற்க முடியாது எனவும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர் கே. காந்தராஜா தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாநகர சபைக்கு சொகுசு வாகனம் ஒன்று கொள்வனவு செய்யப்படவுள்ளமை தொடர்பில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் கருத்து வெளியிட்ட அவர், “மட்டக்களப்பு மாநகர சபையின் 9வது அமர்வு கடந்த 06ஆம் திகதி நடைபெற்ற போது மாநகர முதல்வரினால் சொகுசு வாகனமொன்றைக் கொள்வனவு செய்வது தொடர்பாக கொண்டுவரப்பட்ட தீர்மானத்தினை ஏற்றுக்கொள்ள முடியாது.

மட்டக்களப்பு மாநகர உட்பட எந்தவொரு உள்ளுராட்சி மன்றங்களும் பொதுமக்களின் வரிப்பணத்திலேயே இயங்குகின்றன. அவ்வாறிருக்கும்போது பொதுமக்களின் வரிப்பணத்தை அநாவசியச் செலவுகள் செய்வதற்கு அனுமதிக்க முடியாது.

பொதுமக்களின் வரிப்பணத்தைக் கொண்டு சொகுசு வாகனம் வாங்கி அதில் பயணம் செய்து சொகுசு அனுபவிப்பதை விட பொதுமக்களின் அந்த வரிப் பணத்தைக் கொண்டு மீளவும் பொதுமக்களின் தேவைகளையே பூர்த்தி செய்தால் சிறப்பாக இருக்கும்.

அதுதான் சரியானதும் கூட. பொதுமக்களுக்கு நிறைவேற்றிக் கொடுக்க வேண்டிய பல அத்தியாவசிய சேவைகள் கிடப்பில் இருக்கும்போது இவ்வாறு சிந்திப்பது அநியாயமானது.

உதாரணமாக மட்டக்களப்பு மாநகர சபையில் கழிவகற்ற தேவையான போதியளவு வாகனங்கள் இல்லாத நிலை காணப்படுகின்றது. இதனால் பல கிராமங்களில் குறித்த நாட்களுக்குள் குப்பைகளையும், கழிவுகளையும் அகற்ற முடியாமல் உள்ளதால் மக்கள் பல அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

எனவே சொகுசு வாகனம் வாங்குவதற்காக சுமார் எட்டு மில்லியன் ரூபா அளவில் பணம் செவவு செய்து வாங்க வேண்டிய அவசியம் இல்லை.

எமது மாநகர சபையின் முதல்வர், மற்றும் ஆணையாளர்கள் பயணம் செய்வதற்கு என இரண்டு வாகனங்கள் உள்ளபோது இன்னுமொரு வாகனம் வாங்கவேண்டிய அவசியம் இல்லவே இல்லை.

பொதுமக்களின் வரிப்பணத்தில் கழிவகற்றலுக்காக பயன்படுத்தக்கூடிய நவீனரக வாகனங்களை கொள்வனவு செய்வதன் மூலம் மட்டக்களப்பு மாநகர மக்களின் பல தேவைகளை இலகுவாக பூர்த்திசெய்ய முடியும்“ என தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • ‘மாணிக்க நகர்’ மாதிரிக் கிராமம் மக்களிடம் கையளிப்பு  

    மட்டக்களப்பு, கண்ணபுரம் கிழக்கில் அமைக்கப்பட்டுள்ள ‘மாணிக்க நகர்’ 167 ஆவது மாதிரிக் கிரா

  • மாணவர்கள் தாக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்  

    மட்டக்களப்பு – மண்முனை மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட முதலைக்குடா மாணவர்கள் தாக்கப்பட்டதைக் கண

  • பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை எதிர்த்து கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்  

    புதிதாக கொண்டுவரப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை எதிர்த்து மட்டக்களப்பில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட

  • பிள்ளையானின் விளக்கமறியல் மீண்டும் நீடிப்பு  

    கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சரான சிவநேசத்துரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையானின் விளக்கமற

  • கல்முனை மாநகர மேயருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் !  

    கல்முனை மாநகர மேயர் அத்துமீறி செயற்படுவதாக தெரிவித்து, மட்டக்களப்பு – பெரியகல்லாறு பகுதி மக்கள


#Tags

  • தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி
  • மட்டக்களப்பு
  • மாநகரசபை
    பிந்திய செய்திகள்
  • மைத்திரி -மஹிந்த கூட்டணியை இறுதி செய்ய ஆறு பேர் கொண்ட குழு!
    மைத்திரி -மஹிந்த கூட்டணியை இறுதி செய்ய ஆறு பேர் கொண்ட குழு!
  • லிபரல் அரசாங்கத்தின் வரவு – செலவுத் திட்டம் மார்ச்சில்!
    லிபரல் அரசாங்கத்தின் வரவு – செலவுத் திட்டம் மார்ச்சில்!
  • விஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ் டிரைலர்
    விஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ் டிரைலர்
  • இலங்கை – சீன உறவுகளை விரிவுபடுத்துவது குறித்து புதுடெல்லியில் பேச்சு!
    இலங்கை – சீன உறவுகளை விரிவுபடுத்துவது குறித்து புதுடெல்லியில் பேச்சு!
  • முதலீடுகளை மேற்கொள்வதற்காக அமெரிக்காவுக்கு பகிரங்க அழைப்பு!
    முதலீடுகளை மேற்கொள்வதற்காக அமெரிக்காவுக்கு பகிரங்க அழைப்பு!
  • நீதிபதிகள் நியமனத்தில் தாமதத்திற்கு காரணம் கொலீஜியம் – தலைமை நீதிபதி
    நீதிபதிகள் நியமனத்தில் தாமதத்திற்கு காரணம் கொலீஜியம் – தலைமை நீதிபதி
  • அரசாங்கம் வழங்கிய வாக்குறுதி இன்னும் நிறைவேற்றவில்லை – மாவை!
    அரசாங்கம் வழங்கிய வாக்குறுதி இன்னும் நிறைவேற்றவில்லை – மாவை!
  • ரொறொன்ரோ போக்குவரத்துச் சபையின் வருமானத்தில் 61 மில்லியன் டொலர் இழப்பு!
    ரொறொன்ரோ போக்குவரத்துச் சபையின் வருமானத்தில் 61 மில்லியன் டொலர் இழப்பு!
  • பிரெக்ஸிற் ஒப்பந்தத்தை எட்டுவதற்கான பணிகள் துரிதகதியில் இடம்பெறுகின்றன: மே-யின் செய்தித்தொடர்பாளர்
    பிரெக்ஸிற் ஒப்பந்தத்தை எட்டுவதற்கான பணிகள் துரிதகதியில் இடம்பெறுகின்றன: மே-யின் செய்தித்தொடர்பாளர்
  • ஆசிய அரசியல் கட்சிகளின் செயளாலர் நாயகத்துடன் மஹிந்த பேச்சு!
    ஆசிய அரசியல் கட்சிகளின் செயளாலர் நாயகத்துடன் மஹிந்த பேச்சு!
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.