மோடியின் ஆட்சியிலேயே வறுமை தலைதூக்கியுள்ளது! – சிதம்பரம் சாடல்

பிரதமர் மோடி தலைமையிலான தற்போதைய மத்திய அரசு மக்களை வறுமையில் தள்ளியுள்ளதென காங்கிரஸின் முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார்.
டெல்லியில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டார். தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர்:-
“பிரதமர் மோடி தலைமையிலான அரசு, கடந்த நான்கு வருடங்களாக மக்களை முன்னேற்றுவதற்கு பதிலாக ஏமாற்றி வருகின்றது.
நாட்டைக் காப்பாற்ற காங்கிரஸ் கட்சியால் மட்டுமே முடியும். கடந்த ஆட்சிக் காலத்தில் நாங்கள் கொடுத்த வாக்குறுதிக்கு அமைவாக வங்கிக் கடன் பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டோம்.
இப்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள வரவு செலவுத் திட்டத்தில், நாட்டின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் எந்தத் திட்டமும் இல்லை” என தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.