மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளது – கமல் ஹாசன்
In இந்தியா October 16, 2018 11:06 am GMT 0 Comments 1406 by : ஜெயச்சந்திரன் விதுஷன்
மக்கள் நீதி மய்யத்திற்கு மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளதாக அந்தக் கட்சியின் தலைவர் கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்.
மேலும் திராவிடக்கட்சிகள் அங்கீகரிக்காமல் போனால் அதுப்பற்றி தனக்கு கவலையில்லை என்றும் அது அவர்களின் பெருந்தன்மையின்மையை காட்டுகிறது என்றும் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
மேலும், கூறுகையில், “நான் மக்களை நோக்கித்தான் சென்று கொண்டிருக்கிறேன். கட்சிகளை நோக்கி செல்லவில்லை.
மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளதாக நினைக்கிறேன். அதை நோக்கி போவது தான், இவர்களை பற்றி மிகவும் கவலைப்பட்டால் வேலைக்கு இடைஞ்சலாக இருக்கும்.
அவர்கள் அங்கீகாரத்தை எதிர்ப்பார்க்கவில்லை. பெரியவர்கள் இருந்தபோது எனக்கு கொடுக்கவேண்டிய அனைத்து மரியாதையையும் கொடுத்துக்கொண்டிருந்தார்.
இப்போது உள்ளவர்கள் அதை தர மறுத்தால் அது அவர்களின் பெருந்தன்மையின்மையைக் காட்டுகிறது.” என கூறினார்.
மேலும் மக்கள் பிரச்சினைகளுக்கு காரணம் திராவிடக்கட்சிகள் என்று கூறுகிறீர்களா? என ஊடகவியலாளர் கேள்வியெழுப்பியிருந்தனர்.
இதற்கு பதிலளித்த கமல் “பல முறை அதைக் கூறிவிட்டேன். மறுபடியும் மறுபடியும் வெந்தப்புண்ணில் வேலைப்பாய்ச்ச வேண்டாம்.” என கூறினார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.