மக்டோனல்டின் காகித உறிஞ்சு குழாய்களை மீள்சுழற்சி செய்யமுடியாது
In இங்கிலாந்து August 5, 2019 2:30 pm GMT 0 Comments 2556 by : S.K.Guna

மக்டோனல்டின் புதிய காகித உறிஞ்சு குழாய்கள் சூழலுக்குப் பொருத்தமானவை என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளபோதிலும் அவற்றை மீள்சுழற்சி செய்யமுடியாது.
பிரித்தானியாவில் கடந்த ஆண்டு முதல் பசுமைத் திட்டத்தின் அங்கமாக பிளாஸ்ரிக் உறிஞ்சு குழாய்களை தனது பாவனையில் இருந்து மக்டோனல்ட் நிறுவனம் நிறுத்தியிருந்தது. ஆயினும் அக்குழாய்கள் மீள்சுழற்சி செய்யக்கூடியவை,
ஆனால் இப்போது பயன்படுத்தப்படும் காகித உறிஞ்சு குழாய்களின் தடிமன் காரணமாக அவற்றை மீள்சுழற்சி செய்யமுடியாது என்றும் அவை பொதுவான கழிவுகளில் சேர்க்கப்படவேண்டும் என்றும் மக்டோனல்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த இலையுதிர் காலத்திலிருந்து மக்டோனல்ட் நிறுவனம் இங்கிலாந்து மற்றும் அயர்லாந்துக் குடியரசில் உள்ள தனது உணவகங்களில் காகித உறிஞ்சு குழாய்களைப் பயன்படுத்தி வருகின்றது.
இந்த காகித உறிஞ்சு குழாய்கள் தெற்கு வேல்ஸிலுள்ள எப்பியூ வேல் நகரில் உற்பத்தி செய்யப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.